படமாகும் வாழ்க்கை கதை... கங்குலியாக நடிக்கும் ஆயுஷ்மன் குரானா?
|கிரிக்கெட் வீரர் தோனி வாழ்க்கை ஏற்கனவே சினிமா படமாக வந்தது. சச்சின் தெண்டுல்கர் வாழ்க்கையையும் ஆவண படமாக எடுத்து வெளியிட்டனர். பெண்கள் கிரிக்கெட் அணியை சேர்ந்த மிதாலி ராஜ் வாழ்க்கையும் டாப்சி நடிக்க படமானது.
தொடர்ந்து கிரிக்கெட் வீரர் குங்குலி வாழ்க்கையையும் படமாக எடுக்க ஏற்பாடுகள் நடந்தன. இதுகுறித்து கங்குலி கூறும்போது, "எனது வாழ்க்கையை சினிமா படமாக எடுக்க ஒப்புதல் கொடுத்துள்ளேன்'' என்றார்.
கங்குலியின் சிறுவயது வாழ்க்கையில் இருந்து பி.சி.சி.ஐ. தலைவராக நியமிக்கப்பட்டதுவரை உள்ள சம்பவங்கள் படத்தில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டது. கங்குலியாக நடிக்க ரன்பிர் கபூர் பெயர் அடிபட்டது. ஆனாலும் பட வேலைகளை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டு வந்தது.
இந்த நிலையில் தற்போது கங்குலி வேடத்தில் பிரபல இந்தி நடிகர் ஆயுஷ்மன் குரானாவை நடிக்க வைக்க முடிவு செய்து அவரிடம் பேசி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கங்குலி 2000-ம் ஆண்டில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார். பேட்டிங்கில் வல்லவரான அவர் ஏராளமான சிக்சர், பவுண்டரிகள், சதங்கள் அடித்து புகழ் பெற்றார். கங்குலி தலைமையில் வெளிநாடுகளில் இந்திய அணி 28 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 11 வெற்றிகளை பெற்றுள்ளது.