சாதி பிரச்சினை கதையில் இனியா
|``உண்மை சம்பவங்களை மையமாக கொண்டு உருவான `சீரன்' என்ற படத்தில் இனியா நடிக்கிறார்.
ஜேம்ஸ் கார்த்திக், இனியா, சோனியா அகர்வால் ஆகியோர் `சீரன்' என்ற படத்தில் நடித்துள்ளனர். அருந்ததி நாயர், கிரிஷா குரூப், ஆடுகளம் நரேன், சென்றாயன், கராத்தே வெங்கடேஷ் உள்ளிட்ட மேலும் பலரும் இதில் நடித்து இருக்கிறார்கள்.
இந்தப் படத்தை ராஜேஷ் எம்.உதவியாளர் துரை கே.முருகன் டைரக்டு செய்துள்ளார். படம் பற்றி அவர் கூறும்போது, ``உண்மை சம்பவங்களை மையமாக வைத்து இந்தப் படம் தயாராகிறது. சாதி பிரச்சினையால் பாதிக்கப்படும் ஒரு குடும்பத்துக்கு மறுக்கப்படும் உரிமைகள் அதனால் ஏற்படும் பிரச்சினைகள் மற்றும் ஊரார் அந்த குடும்பத்தை ஏற்றுக்கொண்டார்களா? என்பதை மையமாக வைத்து படம் தயாராகி உள்ளது.
சாதியே இருக்கக் கூடாது என்பதை வலியுறுத்தும் படமாக இது இருக்கும். ஜேம்ஸ் கார்த்திக், இனியா ஆகியோர் இருவிதமான தோற்றங்களில் நடித்துள்ளனர். கிளைமாக்ஸில் இடம் பெறும் ஒரு பாடல் காட்சியில் ஜேம்ஸ் கார்த்திக் ஆக்ரோஷமாக நடனம் ஆடி உள்ளார். இந்த காட்சி படத்தின் திருப்புமுனையாக இருக்கும்'' என்றார். படத்தை ஜேம்ஸ் கார்த்திக், நியாஸ் ஆகியோர் தயாரித்துள்ளனர்.