மகளின் திருமண விழாவில் நடந்த சுவாரஸ்யம்... யாரும் எதிர்பார்க்காததை செய்த அமீர்கான்...!
|திருமணத்திற்குப் பின்னர் அமீர்கான் தனது குடும்பத்தினருடன் போட்டோ எடுத்துக்கொண்டார்.
மும்பை
பாலிவுட் நடிகர்களில் முன்னணி நடிகர் அமீர்கான். 35 ஆண்டுகாலமாக பாலிவுட் சினிமாவில் பல வெற்றி படங்களில் நடித்து தனக்கென தனி முத்திரையை பதித்துள்ளார். இவர் நடிப்பில் கடந்த 2022ம் ஆண்டு வெளியான படம் லால் சிங் சத்தா. நாடு முழுவதும் வெளியான இந்தப் படத்தை புறக்கணிக்க வேண்டும் என்று சமூக ஊடகங்களில் கருத்து நிலவியதால் ரூ.180 கோடி செலவில் தயாரான இந்த படம் ரூ.38 கோடி மட்டுமே வசூலித்து மோசமான தோல்வியை சந்தித்தது.
இதையடுத்து இவர் சினிமாவில் இருந்து கொஞ்ச காலம் விலகி இருக்கப்போவதாக அறிவித்தார். அவர் மீண்டும் நடிக்க வேண்டும் என்று ரசிகர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்த வண்ணம் உள்ளனர். இதற்கிடையே தனது இரண்டாவது மனைவி கிரண் ராவையும் விவாகரத்து செய்வதாக அறிவித்தார்.
இந்நிலையில் நடிகர் அமீர்கானின் மகள் இரான் கானுக்கும் - நுபுர் சிகாரே என்பவருக்கும் நேற்று மும்பையில் திருமணம் நடைபெற்றது. பாந்த்ராவில் உள்ள தாஜ் லேண்ட்ஸ் எண்டில் நடைபெற்ற திருமண விழாவில் உறவினர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். இதில் அமீர்கானின் முதல் மனைவி ரீனா தத்தா தனது மகன் ஜுனைத் கானுடன் கலந்துகொண்டார். அதேபோல் அமீர்கானின் இரண்டாவது மனைவி கிரண் ராவ் தனது மகன் ஆசாத் ராவ் கானுடன் கலந்து கொண்டனர்.
திருமணத்திற்குப் பின்னர் அமீர்கான் தனது குடும்பத்தினருடன் போட்டோ எடுத்துக்கொண்டார். அப்போது முன்னாள் மனைவி கிரணுடன் பேசிக்கொண்டிருந்த அமீர்கான் திடீரென அவரது கன்னத்தில் முத்தம் கொடுத்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த கிரண் சிரித்து அங்கிருந்து விலகி சென்றார். இதனை கவனித்த அமீர்கான், அவரை தனது அருகில் நிற்க வைத்து போட்டோ எடுத்தார். இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.