கோவிலில் குஷ்புவுக்கு கிடைத்த கவுரவம்
|குஷ்புவுக்கு திருச்சூரில் உள்ள விஷ்ணு மாயா கோவிலில் சிறப்பு கவுரவம் அளிக்கப்பட்டு உள்ளது.
தமிழ் திரையுலகில் 1990-களில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்த குஷ்பு ரசிகர்கள் கோவில் கட்டும் அளவுக்கு புகழ்பெற்றார். தற்போது பா.ஜனதாவில் இணைந்து அரசியல் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.
குஷ்புவுக்கு திருச்சூரில் உள்ள விஷ்ணு மாயா கோவிலில் சிறப்பு கவுரவம் அளிக்கப்பட்டு உள்ளது.
இந்த கோவிலில் வருடந்தோறும் ஒரு பெண்ணை தேர்வு செய்து சிறப்பு பூஜை செய்வது வழக்கம், அந்த வகையில் நடிகை குஷ்புவை கோவில் நிர்வாகம் தேர்வு செய்து அழைப்பு விடுத்தது. அதை ஏற்று கோவிலுக்கு சென்று சிறப்பு பூஜையில் குஷ்பு கலந்து கொண்டார்.
அது தொடர்பான புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் குஷ்பு வெளியிட்டுள்ள பதிவில், "கடவுளின் தெய்வீக ஆசீர்வாதம். திருச்சூரில் உள்ள விஷ்ணு மாயா கோவிலில் நாரி பூஜை செய்ய என்னை அழைத்ததை அதிர்ஷ்டமாக உணர்கிறேன்.
தேர்ந்தெடுக்கப்பட்டவர்களை மட்டுமே இங்கு அழைப்பார்கள். தெய்வமே அந்த நபரை தேர்ந்தெடுப்பதாக நம்புகிறார்கள். இத்தகைய பெருமையை எனக்கு வழங்கிய கோவிலில் உள்ள அனைவருக்கும் நன்றி. தினமும் பிரார்த்தனை செய்து நம்மை காக்க ஒரு சூப்பர் சக்தி இருப்பதாக நம்புகிறவர்களுக்கு இது மேலும் பல நல்ல விஷயங்களை கொண்டு வரும் என்று நம்புகிறேன்'' என நெகிழ்ச்சியோடு குறிப்பிட்டு உள்ளார்.