கதாநாயகியானது அதிர்ஷ்டம் - ஐஸ்வர்யா மேனன் நெகிழ்ச்சி
|தமிழில் காதலில் சொதப்புவது எப்படி தீயா வேலை செய்யனும் குமாரு வீரா நான் சிரித்தால் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள ஐஸ்வர்யா மேனன் ஸ்பை படம் மூலம் தெலுங்குக்கும் போய் உள்ளார்.
ஐதராபாத்தில் ஐஸ்வர்யா மேனன் அளித்துள்ள பேட்டியில் "ஒரு நடிகையாக எனது சினிமா வாழ்க்கை பயணம் திருப்தியாக இருக்கிறது. நான் கதாநாயகி ஆவேன் என்று எதிர்பார்க்கவில்லை. என்ஜினீயருக்கு படித்தேன். ஆரம்பத்தில் சில விளம்பர படங்களில் நடித்தேன். அதன்பிறகு சினிமாவில் மெல்ல மெல்ல அடியெடுத்து வைத்து இப்போது கதாநாயகி ஆகி இருக்கிறேன். இதை அதிர்ஷ்டமாக பார்க்கிறேன்.
இந்த பயணம் எனக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. தெலுங்கில் முதல் முறையாக ஸ்பை படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி இருக்கிறேன். இந்த படத்தில் எனக்கு சில சண்டை காட்சிகள் இருக்கின்றன. இதற்காக துப்பாக்கியை எப்படி சரியாக பிடிப்பது சுடுவது என்பதற்கெல்லாம் பிரத்யேக பயிற்சி எடுத்துக்கொண்டேன்.
காதல் கதைகளில் மட்டுமின்றி அதிரடி சண்டையிலும் என்னால் நடிக்க முடியும் என்ற நம்பிக்கை இந்த படத்தின் மூலம் எனக்கு ஏற்பட்டு உள்ளது'' என்றார்.