< Back
சினிமா செய்திகள்
கதாநாயகியான மாடல் அழகி
சினிமா செய்திகள்

கதாநாயகியான மாடல் அழகி

தினத்தந்தி
|
17 Jun 2022 10:58 AM IST

‘குண்டாஸ்’ என்ற படத்தில் உத்திரபிர தேசத்தைச் சேர்ந்த மாடல் அழகி அர்ச்சனா கவுதம் கதாநாயகியாக நடிக்கிறார்.

செய்யாத குற்றத்துக்காக போலீஸ் சித்ரவதையையும், சிறை தண்டனையையும் அனுபவிக்கும் ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வியலை சித்தரிக்கும் படத்துக்கு, 'குண்டாஸ்' என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. ஆர்.ஏ.ஆனந்த் டைரக்டு செய்கிறார். ஆர்.நடராஜன் தயாரிக்கிறார்.

கதாநாயகனாக 'ஷா' நடிக்க, உத்திரபிர தேசத்தைச் சேர்ந்த மாடல் அழகி அர்ச்சனா கவுதம் கதாநாயகியாக நடிக்கிறார். மொட்டை ராஜேந்திரன், கஞ்சா கருப்பு, கராத்தே ராஜா மற்றும் பலர் நடிக்கிறார்கள். கதை, திரைக்கதை, வசனம், ஒளிப்பதிவு, இயக்கம், ஆர்.ஏ.ஆனந்த்.

மேலும் செய்திகள்