< Back
சினிமா செய்திகள்
என் இடத்திற்கு இன்னொருவர் வருவார்- நடிகர் சூரி
சினிமா செய்திகள்

என் இடத்திற்கு இன்னொருவர் வருவார்- நடிகர் சூரி

தினத்தந்தி
|
2 Jun 2024 4:14 PM IST

சூரியின் இடத்திற்கு வேறு நடிகர்கள் வருவார்கள். அவரை பின்தொடர்ந்து மேலும் நடிகர்கள் வருவார்கள். அனைவருக்கும் வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று நடிகர் சூரி கூறினார்.

துரை செந்தில்குமார் இயக்கத்தில் நடிகர்கள் சூரி, சமுத்திரக்கனி, சசிக்குமார் உள்ளிட்டப் பலர் நடித்திருக்கும் படம் 'கருடன்'. இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்று வரும் நிலையில், ரசிகர்களுடன் சேர்ந்து சூரி குரோம்பேட்டையில் படம் பார்த்தார்.

அப்போது செய்தியாளர்களை சந்தித்து அவர் பேசியதாவது, "ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது. என்னுடைய அடுத்தக் கட்ட பயணத்திற்கு ரசிகர்கள் வரவேற்பு கொடுத்து வருகின்றனர். நம்பிக்கையாக இருக்கிறேன். அடுத்தடுத்து பயணிக்கவும் தயாராக இருக்கிறேன். முதல் படத்தில் என்னை அறிமுகப்படுத்திய இயக்குநர் வெற்றிமாறனுக்கு நன்றி சொல்லிக் கொள்கிறேன்" என்றார்.

அடுத்தடுத்து காமெடி கதாபாத்திரங்கள் வந்தால் நடிப்பீர்களா என கேட்டபொழுது "ஹீரோ நன்றாக போய்க் கொண்டிருக்கிறது. அப்படியே செல்வோம். கதைக்காக தான் திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறேன்" என்றவரிடம், திரைப்பட நடிகர்கள் தொடர்ந்து சொன்ன நேரத்தை விட தாமதமாக வருவது குறித்து கேட்டபோது "சொன்ன நேரத்திற்கு வரவேண்டும் என்பதுதான் நாகரிகம். ஆனால், அடுத்தடுத்து இடங்களில் சென்று வரும் பொழுது ஒவ்வொரு இடங்களில் தாமதம் ஆவது இறுதி இடங்களில் கடைசியாக மொத்தமாக தாமதம் ஆகிறது" என்றார்.


மேலும் அவர் பேசியபோது, "காமெடியனாக நான் நடித்த பொழுது இருந்த ரசிகர்கள் இப்பொழுது ஹீரோவாக நடிக்கும் பொழுதும் வரவேற்பை கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். தொடர்ந்து கதைகளும் நன்றாக இருந்தால் நாம் கண்டிப்பாக நடிப்போம். காமெடியாக கதையும் நன்றாக இருந்தால் அதிலும் கண்டிப்பாக நடிப்பேன். ஹீரோவாக நடிப்பதற்கு இடையூறு இல்லாமல் இருக்கும் காமெடி கதாபாத்திரங்களில் கண்டிப்பாக நடிப்பேன்.

அனைவருக்கும் வாய்ப்பு கொடுக்க வேண்டும். சூரியின் இடத்திற்கு வேறு நடிகர்கள் வருவார்கள். அவரை பின்தொடர்ந்து மேலும் நடிகர்கள் வருவார்கள். அனைவருக்கும் வாய்ப்பு கொடுக்க வேண்டும். காமெடி நடிகராக வாய்ப்பு தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நாம் வாய்ப்பு கொடுப்பதில் தவறில்லை" என்று அவர் கூறினார்.

மேலும் செய்திகள்