< Back
சினிமா செய்திகள்
அவர் ஒரு சிறந்த தந்தை - ரன்பீர் கபூரை பாராட்டிய பாலிவுட் நடிகை

image courtecy:instagram@__ranbir_kapoor_official__

சினிமா செய்திகள்

'அவர் ஒரு சிறந்த தந்தை' - ரன்பீர் கபூரை பாராட்டிய பாலிவுட் நடிகை

தினத்தந்தி
|
31 March 2024 8:46 AM IST

ரன்பீர் மாதிரி ஒரு சிறந்த தந்தையை பார்த்ததில்லை என்று பாலிவுட் நடிகை கூறினார்.

மும்பை,

இந்தி திரைத்துறையின் முன்னணி நடிகை ஆலியாபட். இவர் கடந்த 2022ம் ஆண்டு இந்தி நடிகர் ரன்பீர் கபூரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு கடந்த ஆண்டு பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு ராகா என பெயரிடப்பட்டது.

இந்நிலையில் பாலிவுட் நடிகை நீது கபூர், ரன்பீர் கபூர்- ஆலியா பட் தம்பதியை பாராட்டி பேசி உள்ளார். சமீபத்தில் நீது கபூர் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது,

ஒரு விசயம் உங்களிடம் கூற விரும்புகிறேன். ரன்பீர் கபூர் ஒரு சிறந்த மனிதர். அவர் அதிகமாக அலட்டிக்கொள்ளாதவர். நேகா பிறந்தபோது அவரது முகத்தில் பல்வேறு வெளிப்பாடுகள் காணப்பட்டன. அதனை நான் முதல் முறையாக பார்த்தேன். அப்போது அவரிடம் முதல் முறையாக உங்கள் முகத்தில் பல்வேறு வெளிப்பாடுகளை பார்க்கிறேன் என்று கூறினேன்.

மேலும் அவர் ஒரு சிறந்த தந்தை. நான் நிறைய தந்தைகளை பார்த்திருக்கிறேன் ஆனால் ரன்பீர் மாதிரி ஒரு சிறந்த தந்தையை பார்த்ததில்லை. ராகா தனது தந்தையை தேடுகிறாள். அவருடன் விளையாட விரும்புகிறாள். ஆலியா மிகச்சிறந்த தாய். இவ்வாறு கூறினார்.

ரன்பீர் கபூர் - ஆலியாபட் தம்பதி தங்களது மகள் ராகாவுக்காக ரூ.250 கோடி மதிப்பில் பங்களா ஒன்றை மும்பையில் கட்டி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் செய்திகள்