< Back
சினிமா செய்திகள்
விதார்த் நடித்துள்ள லாந்தர் படத்தின் முதல் பாடல் வெளியானது
சினிமா செய்திகள்

விதார்த் நடித்துள்ள 'லாந்தர்' படத்தின் முதல் பாடல் வெளியானது

தினத்தந்தி
|
20 May 2024 9:49 PM IST

சாஜி சலீம் இயக்கத்தில் விதார்த் நடித்துள்ள திரைப்படம் 'லாந்தர்'.

சென்னை,

நடிகர் விதார்த் தற்போது 'லாந்தர்' என்ற படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். இந்த படத்தை முண்டாசுப்பட்டி, ராட்சசன், கட்டா குஸ்தி படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றிய சாஜி சலீம் இயக்கியுள்ளார். இந்த படத்தில் சுவேதா டோரத்தி, விபின், சஹானா கவுடா, பசுபதி ராஜா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

எம் சினிமா புரொடக்சன் தயாரித்துள்ள இந்த படத்துக்கு எம்.எஸ். பிரவீன் இசையமைத்துள்ளார். இந்த நிலையில் இந்த படத்தின் முதல் பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி 'அயல் பிறை' என்ற பாடலின் லிரிக் வீடியோ வெளியாகி உள்ளது. உமா தேவி, தேவா எழுதியுள்ள இந்த பாடலை சக்திஸ்ரீ கோபாலன் பாடியுள்ளார். இந்த பாடல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

மேலும் செய்திகள்