< Back
சினிமா செய்திகள்
ஏழு கடல் ஏழு மலை படத்தின் முதல் பாடல் வெளியானது
சினிமா செய்திகள்

'ஏழு கடல் ஏழு மலை' படத்தின் முதல் பாடல் வெளியானது

தினத்தந்தி
|
15 Feb 2024 5:53 AM IST

இந்த படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

சென்னை,

இயக்குனர் ராம் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'ஏழு கடல் ஏழு மலை'. இந்த படத்தில் கதாநாயகனாக மலையாள நடிகர் நிவின் பாலி நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக அஞ்சலி நடித்துள்ளார். மேலும், நடிகர் சூரி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ள இந்த படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த நிலையில், 'ஏழு கடல் ஏழு மலை' படத்தின் முதல் பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி 'மறுபடி நீ' என்ற பாடல் வெளியாகி உள்ளது.

பாடலாசிரியர் மதன் கார்க்கி எழுதியுள்ள இந்த பாடலை யுவன் சங்கர் ராஜா, சித்தார்த் இணைந்து பாடியுள்ளனர். இந்த பாடல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

மேலும் செய்திகள்