< Back
சினிமா செய்திகள்
பயமறியா பிரம்மை படத்தின் முதல் பாடல் வெளியானது
சினிமா செய்திகள்

'பயமறியா பிரம்மை' படத்தின் முதல் பாடல் வெளியானது

தினத்தந்தி
|
19 Jun 2024 10:00 PM IST

'பயமறியா பிரம்மை' திரைப்படம் வருகிற 21-ந்தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

புதுமுக நடிகர் ஜேடி கதையின் நாயகனாக நடித்துள்ள திரைப்படம் 'பயமறியா பிரம்மை'. அறிமுக இயக்குனர் ராகுல் கபாலி இயக்கத்தில் உருவாகி உள்ள இந்த படத்தில், குரு சோமசுந்தரம், ஜான் விஜய், ஹரிஷ் உத்தமன், வினோத் சாகர், விஸ்வந்த், சாய் பிரியங்கா ரூத், திவ்யா கணேஷ், ஹரீஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு கே இசையமைத்துள்ளார். அகில் பிரகாஷ் படத்தொகுப்பு செய்கிறார்.

சமீபத்தில் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி கவனம் பெற்றது. இந்த நிலையில் இந்த படத்தின் முதல் பாடலாக 'சாம்பல் நிற கனவுகள்' என்ற பாடலின் லிரிக் வீடியோ வெளியாகி உள்ளது. இந்த பாடலை ஹிப் ஹாப் தமிழா ஆதி மற்றும் ஷான் ரோல்டன் தங்களுடைய சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டனர். வெரோனிகா எழுதியுள்ள இந்த பாடலை ஜேடி பாடியுள்ளார். இந்த பாடல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 'பயமறியா பிரம்மை' திரைப்படம் வருகிற 21-ந்தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்