< Back
சினிமா செய்திகள்
தங்கர் பச்சான் இயக்கும் கருமேகங்கள் கலைகின்றன படத்தின் முதல் பாடல் வெளியானது..!
சினிமா செய்திகள்

தங்கர் பச்சான் இயக்கும் 'கருமேகங்கள் கலைகின்றன' படத்தின் முதல் பாடல் வெளியானது..!

தினத்தந்தி
|
6 May 2023 10:36 PM IST

தங்கர் பச்சான் இயக்கத்தில் உருவாகும் 'கருமேகங்கள் கலைகின்றன' திரைப்படத்தின் முதல் பாடல் வெளியாகி உள்ளது.

சென்னை,

தமிழில் அழகி, சொல்ல மறந்த கதை, பள்ளிக்கூடம், ஒன்பது ரூபாய் நோட்டு உள்ளிட்ட பல படங்களை டைரக்டு செய்தவர் தங்கர்பச்சான். நிறைய படங்களுக்கு ஒளிப்பதிவும் செய்துள்ளார். தற்போது இயக்குனர் தங்கர் பச்சான் இயக்கி வரும் திரைப்படம் 'கருமேகங்கள் கலைகின்றன'.

இந்த படத்தில் இயக்குனர் பாரதிராஜா, யோகி பாபு, கவுதம் மேனன், அதிதி பாலன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். ஜி.வி பிரகாஷ் குமார் இசையமைக்கும் இந்த படத்திற்கு கவிஞர் வைரமுத்து பாடல் வரிகள் எழுதுகிறார். இந்த திரைப்படம் விரைவில் திரைக்கு வர உள்ளது.

இந்த நிலையில் இந்த படத்தின் முதல் பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. 'செவ்வந்தி பூவே' என்ற இந்த பாடலை சத்ய பிரகாஷ் பாடியுள்ளார். இந்த பாடல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

மேலும் செய்திகள்