< Back
சினிமா செய்திகள்
சினிமா செய்திகள்
பிரபு தேவா நடிக்கும் 'வுல்ப்' படத்தின் முதல் பாடல் வெளியானது
|28 Jun 2024 8:09 PM IST
'வுல்ப்' திரைப்படத்தின் முதல் பாடலான வெண்ணிலவே பாடலின் லிரிக்கல் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது
சென்னை,
எஸ்.ஜே.சூர்யாவின் உதவி இயக்குனராக பணியாற்றி 'சிண்ட்ரெல்லா' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார் வினு வெங்கடேஷ். இவர் அடுத்ததாக 'வுல்ப்' திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் கதாநாயகனாக பிரபு தேவா நடித்துள்ளார். மேலும், அனுசுயா பரத்வாஜ், ராய் லக்ஷ்மி, வசிஷ்ட சிம்ஹா, ஆர்.ஜே.ரமேஷ், அஞ்சு குரியன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
சந்தேஷ் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்திற்கு அம்ரிஷ் இசையமைத்துள்ளார். அருள் வின்சென்ட் ஒளிப்பதிவை மேற்கொண்டுள்ளார். இந்த நிலையில், 'வுல்ப்' திரைப்படத்தின் முதல் பாடலான வெண்ணிலவே பாடலின் லிரிக்கல் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. இது ஒரு காதல் பாடலாக அமைந்துள்ளது. இப்பாடலை முகேன் ராவ் மற்றும் சரத் சந்தோஷ் இணைந்து பாடியுள்ளனர். மதன் கார்கி பாடல் வரிகளை எழுதியுள்ளார்.