< Back
சினிமா செய்திகள்
சிவகார்த்திகேயன் தயாரித்துள்ள குரங்கு பெடல் படத்தின் முதல் பாடல் வெளியானது
சினிமா செய்திகள்

சிவகார்த்திகேயன் தயாரித்துள்ள 'குரங்கு பெடல்' படத்தின் முதல் பாடல் வெளியானது

தினத்தந்தி
|
27 April 2024 2:21 PM IST

'குரங்கு பெடல்' திரைப்படம் மே 3- ம்தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

சென்னை,

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சிவகார்த்திகேயன் படத்தயாரிப்பிலும் ஈடுபட்டு வருகிறார். இவர் சிவகார்த்திகேயன் புரொடக்சன்ஸ் என்கிற நிறுவனத்தின் மூலம் ஏராளமான படங்களை தயாரித்துள்ளார். அவரது தயாரிப்பில் வெளிவந்த கனா, அருவி, டாக்டர், டான் உள்ளிட்ட திரைப்படங்கள் வெற்றி பெற்றன.

இந்த நிலையில் சிவகார்த்திகேயன் தற்போது 'குரங்கு பெடல்' என்ற படத்தை தயாரித்துள்ளார். கமல் கண்ணன் இயக்கியுள்ள இந்த படத்துக்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இந்த நிலையில் 'குரங்கு பெடல்' படத்தின் முதல் பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி 'கொண்டாட்டம்' என்ற பாடலின் வீடியோ வெளியாகி உள்ளது.

இயக்குனர் பிரம்மா எழுதியுள்ள இந்த பாடலை அஹானா பாலாஜி, கே. வித்யாரூபிணி, வி. ஷிவாத்மிகா ஆகியோர் பாடியுள்ளனர். இந்த பாடல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 'குரங்கு பெடல்' திரைப்படம் மே 3-ம்தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

மேலும் செய்திகள்