< Back
சினிமா செய்திகள்
கயல் ஆனந்தி நடித்துள்ள மங்கை படத்தின் முதல் பாடல் வெளியானது
சினிமா செய்திகள்

கயல் ஆனந்தி நடித்துள்ள 'மங்கை' படத்தின் முதல் பாடல் வெளியானது

தினத்தந்தி
|
15 Feb 2024 12:39 AM IST

இயக்குனர் குபேந்திரன் காமாட்சி இயக்கத்தில் கயல் ஆனந்தி நடித்துள்ள திரைப்படம் 'மங்கை'.

சென்னை,

கயல், பரியேறும் பெருமாள், திரிஷா இல்லனா நயன்தாரா போன்ற படங்களில் நடித்து வரவேற்பை பெற்றவர் ஆனந்தி. 2021-ல் மூடர்கூடம் இயக்குநர் நவீனின் உறவினரான சாக்ரடீஸ் என்பவரைத் திருமணம் செய்து கொண்ட ஆனந்திக்கு ஒரு மகள் இருக்கிறார்.

இவர் தற்போது இயக்குனர் குபேந்திரன் காமாட்சி இயக்கத்தில் 'மங்கை' திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் துஷி, சாம்ஸ், ஆதித்யா கதிர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜே.எஸ்.எம்.பிக்சர்ஸ் சார்பில் ஏ.ஆர்.ஜாபர் சாதிக் தயாரித்துள்ள இந்த படத்திற்கு தீசன் இசையமைத்துள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி கவனம் பெற்றது.

இந்த நிலையில் 'மங்கை' படத்தின் முதல் பாடல் வெளியாகி உள்ளது. அதன்படி 'ஏலம்மா ஏலோ' என்ற பாடல் வெளியாகி உள்ளது. இந்த பாடலை கிருத்திகா உதயநிதி வெளியிட்டுள்ளார். பாடலாசிரியர் கார்த்திக் நேத்தா எழுதியுள்ள இந்த பாடலை வைக்கம் விஜயலட்சுமி பாடியுள்ளார். இந்த பாடல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த திரைப்படம் மார்ச் 1-ந்தேதி ரிலீசாக உள்ளது.

மேலும் செய்திகள்