கவின் நடித்துள்ள 'ஸ்டார்' படத்தின் முதல் பாடல் இன்று வெளியாகிறது..!
|'ஸ்டார்' திரைப்படம் அடுத்த ஆண்டு பிப்ரவரி 9-ம் தேதி வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை,
'டாடா' படத்தின் வெற்றிக்கு பிறகு நடிகர் கவின் நாயகனாக நடித்துள்ள திரைப்படம் 'ஸ்டார்'. இந்த படத்தை 'பியார் பிரேமா காதல்' படத்தை இயக்கி பிரபலமான இளன் இயக்கியுள்ளார். இந்த படத்தில் லால், அதிதி போஹங்கர், பிரீத்தி முகுந்தன், கீதா கைலாசம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
பி.வி.எஸ்.என்.பிரசாத், ஶ்ரீநிதி சாகர் ஆகியோர் தயாரித்துள்ள இந்த படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். எழில் அரசு ஒளிப்பதிவு செய்துள்ளார். பிரதீப் இ ராகவ் படத்தொகுப்பு செய்கிறார். 'ஸ்டார்' திரைப்படம் அடுத்த ஆண்டு பிப்ரவரி 9-ம் தேதி வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த படத்தின் முதல் பாடல் நடிகர் ரஜினிகாந்த் பிறந்தநாளான இன்று (12.12.2023) வெளியாகும் என்று படக்குழு தெரிவித்திருந்தது. இந்த நிலையில் இந்த பாடல் வெளியாகும் நேரத்தை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி 'காலேஜ் சூப்பர் ஸ்டார்ஸ்' என்ற பாடல் இன்று நண்பகல் 12.12 மணிக்கு வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.