< Back
சினிமா செய்திகள்
சினிமா செய்திகள்
கதிர் நடித்துள்ள 'மாணவன்' படத்தின் முதல் பாடல் வெளியானது
|22 March 2024 10:06 PM IST
'மாணவன்' படத்துக்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.
சென்னை,
இயக்குனர் எஸ்.எல்.எஸ் ஹென்றி இயக்கத்தில் நடிகர் கதிர் கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் 'மாணவன்'. இந்த படத்தில் கரு.பழனியப்பன், மாஸ்டர் மகேந்திரன், யுவலட்சுமி, அன்புதாசன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். பார்ச்சூன் ஸ்டுடியோஸ் மற்றும் எமினன்ட் என்டர்டெயின்மென்ட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்துக்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.
சமீபத்தில் இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி கவனம் பெற்றது. இந்த நிலையில் இந்த படத்தின் முதல் பாடலாக 'கொல்லுறாளே' என்ற பாடல் வெளியாகி உள்ளது. சந்துரு எழுதியுள்ள இந்த பாடலை பிரதீப் குமார் பாடியுள்ளார். இந்த பாடல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.