< Back
சினிமா செய்திகள்
சினிமா செய்திகள்
ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் 'டியர்' படத்தின் முதல் பாடல் வெளியானது
|20 Feb 2024 2:21 AM IST
இயக்குனர் ஆனந்த் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ், ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடிக்கும் திரைப்படம் 'டியர்'.
சென்னை,
'செத்தும் ஆயிரம் பொன்' படத்தின் இயக்குனர் ஆனந்த் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ், ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடிக்கும் திரைப்படம் 'டியர்'. மேலும் இந்த படத்தில், காளி வெங்கட், இளவரசு, ரோகிணி, 'தலைவாசல்' விஜய், கீதா கைலாசம், 'பிளாக் ஷீப்' நந்தினி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
வருண் திரிபுரனேனி, அபிஷேக் ராம் ஷெட்டி, பிருத்விராஜ் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்துக்கு ஜெகதீஷ் சுந்தரமூர்த்தி ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். ருகேஷ் படத் தொகுப்பு மேற்கொள்கிறார்.
இந்த நிலையில், இந்த படத்தின் முதல் பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி 'தலவலி' என்ற பாடலின் லிரிக் வீடியோ வெளியாகி உள்ளது. விண்ணுலக கவி எழுதியுள்ள இந்த பாடலை ஜி.வி.பிரகாஷ் பாடியுள்ளார். இந்த பாடல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.