< Back
சினிமா செய்திகள்
பைட் கிளப்  படத்தின் முதல் பாடல் வெளியானது
சினிமா செய்திகள்

'பைட் கிளப்' படத்தின் முதல் பாடல் வெளியானது

தினத்தந்தி
|
8 Dec 2023 12:08 PM GMT

'பைட் கிளப்' திரைப்படத்தின் முதல் பாடலின் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

சென்னை,

அப்பாஸ் ஏ ரஹ்மத் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'பைட் கிளப்' (Fight Club). இந்த படத்தில் 'உறியடி' விஜய்குமார் கதாநாயகனாக நடித்துள்ளார். மேலும், கார்த்திகேயன், சந்தானம், ஷங்கர் தாஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

ரீல் குட் பிலிம்ஸ் தயாரித்துள்ள இந்த படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். இந்த படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் 'ஜி ஸ்குவாட்' தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் வெளியிடுகிறார். இப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் மற்றும் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், 'பைட் கிளப்' திரைப்படத்தின் முதல்பாடலின் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

மேலும் செய்திகள்