< Back
சினிமா செய்திகள்
தனுஷ் நடிக்கும் திருச்சிற்றம்பலம் படத்தின் முதல் பாடல் ஜூன் 24-ல் வெளியாகும் - படக்குழு அறிவிப்பு
சினிமா செய்திகள்

தனுஷ் நடிக்கும் 'திருச்சிற்றம்பலம்' படத்தின் முதல் பாடல் ஜூன் 24-ல் வெளியாகும் - படக்குழு அறிவிப்பு

தினத்தந்தி
|
22 Jun 2022 2:14 PM GMT

தனுஷ் நடிக்கும் 'திருச்சிற்றம்பலம்' படத்தின் முதல் பாடல் ஜூன் 24-ம் தேதி வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.

சென்னை,

யாரடி நீ மோகினி', 'குட்டி', 'உத்தமபுத்திரன்' படங்களை இயக்கிய மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் உருவாகி உள்ள 'திருச்சிற்றம்பலம்' படத்தில் தனுஷ் நடித்துள்ளார். இப்படத்தில் நித்யா மேன‌ன், பிரியா பவானி சங்கர், ராஷி கன்னா, பிரகாஷ்ராஜ், இயக்குனர் பாரதிராஜா உள்ளிட்ட பல முன்னணி பிரபலங்கள் நடித்துள்ளனர்.

இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. இந்த படத்தின் கதாபாத்திரங்களை படக்குழுவினர் அறிமுகம் செய்தனர். அதனை தொடர்ந்து 'திருச்சிற்றம்பலம்' திரைப்படம் ஆகஸ்ட் 18-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழுவினர் ஒரு வீடியோ பதிவு மூலமாக அண்மையில் அறிவித்தது.

இந்த நிலையில், தனுஷ் நடிக்கும் 'திருச்சிற்றம்பலம்' படத்தின் முதல் பாடல் ஜூன் 24-ம் தேதி வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. இந்த பாடலை தனுஷ் - அனிருத் பாடியுள்ளனர். 7 ஆண்டுகளுக்கு பிறகு தனுஷ் - அனிருத் இணையும் பாடல் வெளியாக உள்ளதால் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்