< Back
சினிமா செய்திகள்
சினிமா செய்திகள்
'தண்டட்டி' படத்தின் முதல் பாடல் வெளியானது..!
|9 Jun 2023 10:07 PM IST
பசுபதி நடித்துள்ள 'தண்டட்டி' திரைப்படத்தின் முதல் பாடல் வெளியாகி உள்ளது.
சென்னை,
அறிமுக இயக்குனர் ராம் சங்கய்யா இயக்கத்தில் தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான பசுபதி நடிப்பில் உருவாகி உள்ள திரைப்படம் 'தண்டட்டி'. இந்த படத்தை சர்தார், ரன் பேபி ரன் உள்ளிட்ட படங்களை தயாரித்த பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகி உள்ள இந்த படத்தில் ரோகினி, விவேக் பிரசன்னா, அம்மு அபிராமி உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். சமீபத்தில் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி கவனம் பெற்றது.
இந்த நிலையில், 'தண்டட்டி' திரைப்படத்தின் முதல் பாடலான 'தலையாட்டி பேசுறப்போ' பாடலின் லிரிக் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. தண்டட்டியின் பெருமை பற்றி பேசும் வகையில் அமைந்துள்ள இந்த பாடல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
'தண்டட்டி' திரைப்படம் வருகிற 23-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.