< Back
சினிமா செய்திகள்
சினிமா செய்திகள்
விஜய் நடிப்பில் உருவாகி வரும் வாரிசு திரைப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு
|3 Nov 2022 6:58 PM IST
வம்சி இயக்கத்தில், நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் வாரிசு திரைப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியாகி உள்ளது.
சென்னை,
வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் 'வாரிசு' திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார்.
மேலும், பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வாரிசு படம் பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
இந்த நிலையில் இன்று மாலை வாரிசு படத்தின் முதல் பாடலின் புரோமோ வெளியாகும் என படக்குழு அறிவித்து இருந்தது. அதன்படி முதல் பாடலின் புரோமோவை படக்குழு வெளியிட்டு உள்ளது.
படத்தின் முதல் பாடலின் புரோமோ வெளியாகி உள்ளதால், ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.