'நட்சத்திரம் நகர்கிறது' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது..!
|'நட்சத்திரம் நகர்கிறது' திரைப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிளான 'ரங்க ராட்டினம்' பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.
சென்னை,
இயக்குனர் பா.ரஞ்சித் தற்போது ஒரு முழுநீள காதல் திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்திற்கு 'நட்சத்திரம் நகர்கிறது' என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்தில் துஷாரா விஜயன் மற்றும் காளிதாஸ் ஜெயராம் முண்ணனி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் கலையரசன், ஹரிகிருஷ்ணன், சார்பட்டா பரம்பரை திரைப்படத்தில் 'டான்ஸிங் ரோஸ்' கதாபாத்திரத்தில் நடித்த ஷபீர் உள்ளிட்ட பலர் இந்த திரைப்படத்தில் நடித்துள்ளனர்.
நீலம் புரொடக்சன்ஸ் மற்றும் யாழி பிலிம்ஸ் இணைந்து தயாரிக்கும் இந்த படத்துக்கு இசையமைப்பாளர் தென்மா இசையமைத்துள்ளார். காதலுக்கு பின்னால் இருக்கும் அரசியலை மையமாக கொண்டு இந்த திரைப்படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர், டீசர் ஆகியவை சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
இந்த திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 31-ந்தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த நிலையில் 'நட்சத்திரம் நகர்கிறது' படக்குழு 'ரங்க ராட்டினம்' என்ற பர்ஸ்ட் சிங்கிளை வெளியிட்டுள்ளது. பாடலாசிரியர் அறிவு எழுதியுள்ள இந்த பாடலை எம்.எஸ்.கிருஷ்ணா, கானா முத்து, சங்கீதா சந்தோஷம், கவிதா கோபி, கார்த்திக் மாணிக்கவாசகம் உள்ளிட்டோர் பாடியுள்ளனர். இந்த பாடல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.