< Back
சினிமா செய்திகள்
கார்த்தி நடிக்கும் சர்தார் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது..!
சினிமா செய்திகள்

கார்த்தி நடிக்கும் 'சர்தார்' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது..!

தினத்தந்தி
|
10 Oct 2022 7:39 PM IST

நடிகர் கார்த்தி நடித்துள்ள 'சர்தார்' படத்தின் முதல் பாடல் வெளியாகி உள்ளது.

சென்னை,

பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் கார்த்தி கதாநாயகனாக நடித்துள்ள படம் 'சர்தார்'. இதில் மிரட்டும் வில்லனாக இந்தி நடிகர் சங்கி பாண்டே நடித்துள்ளார். மேலும், ராஷிகண்ணா, ரெஜிஷா விஜயன், லைலா, யுகி சேது, முனிஷ்காந்த், மாஸ்டர் ரித்விக், அவினாஷ், முரளி ஷர்மா மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். 'சர்தார்' திரைப்படம் இந்த வருடம் தீபாவளியன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி அனைவரின் கவனத்தை ஈர்த்தது. இந்த படத்தின் பின்னணி இசையில் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் முழு வீச்சில் ஈடுபட்டு வருகிறார்.

இந்த நிலையில் 'சர்தார்' படத்தின் முதல் பாடலான 'ஏறுமயிலேறி' என்ற பாடலின் லிரிக் வீடியோ தற்போது வெளியாகி உள்ளது. இந்த பாடலை பாடலாசிரியர் யுகபாரதி எழுதியுள்ளார். நாட்டுப்புற பாணியில் உருவாகியுள்ள இந்த பாடலை நடிகர் கார்த்தி பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பாடல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

மேலும் செய்திகள்