< Back
சினிமா செய்திகள்
தக் லைப் திரைப்படத்தின் முதல் படப்பிடிப்பு... புதிய தகவலை வெளியிட்ட படக்குழு
சினிமா செய்திகள்

'தக் லைப்' திரைப்படத்தின் முதல் படப்பிடிப்பு... புதிய தகவலை வெளியிட்ட படக்குழு

தினத்தந்தி
|
24 Jan 2024 4:33 PM IST

தக் லைப் படத்திற்கு இசையமைபாளர் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார்.

சென்னை,

நடிகர் கமல்ஹாசன் இயக்குனர் சங்கர் இயக்கத்தில் இந்தியன்-2 படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்திற்கு பிறகு கமல்ஹாசனின் 234-வது படத்தை இயக்குனர் மணிரத்னம் இயக்குகிறார். 37 வருடங்களுக்கு பிறகு இருவரும் இணைந்துள்ளதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இப்படத்திற்கு 'தக் லைப்' என பெயர் வைத்துள்ளனர்.

மெட்ராஸ் டாக்கீஸ், ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க ரவி கே சந்திரன் ஒளிப்பதிவு செய்கிறார். இந்த படத்தில் நடிகை திரிஷா, நடிகர்கள் துல்கர் சல்மான், ஜெயம்ரவி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளனர். சமீபத்தில் இந்த படத்தில் நடிகர்கள் கௌதம் கார்த்திக், ஜோஜு ஜார்ஜ் மற்றும் நடிகை ஐஸ்வர்ய லட்சுமி ஆகியோர் இணைந்துள்ளதாக பட நிறுவனம் போஸ்டர் வெளியிட்டு அறிவித்திருந்தது.

இந்நிலையில், 'தக் லைப்' (Thug Life) திரைப்படத்தின் படப்பிடிப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் தொடங்குகிறது என படக்குழு தெரிவித்துள்ளது. இன்று முதல் படப்பிடிப்பு இனிதே ஆரம்பம் என ராஜ் கமல் பிலிம்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. இதனால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

மேலும் செய்திகள்