மாரி செல்வராஜ் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு
|இயக்குனர் மாரி செல்வராஜ் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்து தெரிவித்துள்ளார்.
சென்னை,
2018-ம் ஆண்டு வெளியான பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் மாரி செல்வராஜ். அதன்பின்னர் தனுஷ் நடிப்பில் வெளியான கர்ணன் படத்தை இயக்கி தனக்கான இடத்தை பிடித்தார். இவர் இயக்கத்தில் உருவாகியுள்ள 'மாமன்னன்' படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.
இதையடுத்து மாரி செல்வராஜ் தற்போது இயக்கி வரும் திரைப்படம் 'வாழை'. இந்த படத்தில் நடிகர் கலையரசன் கதாநாயகனாக நடிக்கிறார். மேலும் நிகிலா விமல், திவ்யா துரைசாமி, வெயில் படம் மூலம் பிரபலமான பிரியங்கா மற்றும் சில சிறுவர்களும் நடிக்கிறார்கள். இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.
இந்நிலையில், 'வாழை' திரைப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. இதனை இயக்குனர் மாரி செல்வராஜ் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்து தெரிவித்துள்ளார். அந்த பதிவில், "முதற்கட்ட படபிடிப்பு நிறைவடைந்தது- உறுதுணையாய் நின்ற அனைத்துஉள்ளங்களுக்கும் நன்றியும் ப்ரியமும்" என்று பதிவிட்டுள்ளார்.
M4. வாழை
— Mari Selvaraj (@mari_selvaraj) January 11, 2023
- முதற்கட்ட படபிடிப்பு நிறைவடைந்தது- உறுதுணையாய் நின்ற அனைத்துஉள்ளங்களுக்கும் நன்றியும் ப்ரியமும் ❤️❤️❤️❤️❤️ pic.twitter.com/thACnW6qxw