< Back
சினிமா செய்திகள்
சினிமா செய்திகள்
விக்ரம் பிரபு, விதார்த் நடிக்கும் 'இறுகப்பற்று' படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியானது..!
|31 July 2023 11:23 PM IST
விக்ரம் பிரபு, விதார்த் இணைந்து நடிக்கும் 'இறுகப்பற்று' படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது.
சென்னை,
இயக்குனர் யுவராஜ் தயாளன் இயக்கத்தில் நடிகர்கள் விக்ரம் பிரபு மற்றும் விதார்த் இணைந்து நடிக்கும் திரைப்படம் 'இறுகப்பற்று'. இந்த படத்தில் ஸ்ரத்தா ஸ்ரீநாத், ஸ்ரீ, அபர்நதி, சானியா ஐயப்பன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
பொடன்ஷியல் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ள இந்த படத்துக்கு ஜஸ்டின் பிரபாகர் இசையமைத்துள்ளார். கோகுல் பெனாய் ஒளிப்பதிவு செய்துள்ளார். மணிகண்ட பாலாஜி படத்தொகுப்பு செய்கிறார். இந்த நிலையில் இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.