< Back
சினிமா செய்திகள்
சினிமா செய்திகள்
'உறியடி' விஜய்குமார் நடிக்கும் புதிய படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியானது
|23 Feb 2024 10:15 AM IST
கோவிந்த் வசந்தா இசையமைக்கும் இந்த படத்தை ரீல் குட் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
சென்னை,
'உறியடி' விஜய்குமார் நடிப்பில் கடந்த ஆண்டு இறுதியில் வெளியான 'பைட் கிளப்' திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இந்த நிலையில் விஜய்குமார் நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு வெளியாகி உள்ளது.
இந்த படத்துக்கு 'எலக்சன்' என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தை 'சேத்துமான்' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான தமிழ் இயக்குகிறார். கோவிந்த் வசந்தா இசையமைக்கும் இந்த படத்தை ரீல் குட் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
இந்த நிலையில் 'எலக்சன்' படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.