< Back
சினிமா செய்திகள்
சுசீந்திரன் இயக்கும் 2கே லவ் ஸ்டோரி படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் இன்று வெளியாகிறது
சினிமா செய்திகள்

சுசீந்திரன் இயக்கும் '2கே லவ் ஸ்டோரி' படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் இன்று வெளியாகிறது

தினத்தந்தி
|
2 Aug 2024 2:31 AM IST

சிட்டி லைட் பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குனர் சுசீந்திரன் இயக்கும் திரைப்படம் '2கே லவ் ஸ்டோரி'.

சென்னை,

இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் இன்றைய நவ நாகரீக இளைஞர்களின் வாழ்வை சொல்லும் படமாக, ரொமான்ஸ் ஜானரில் உருவாகும் திரைப்படம் '2கே லவ் ஸ்டோரி'. இன்றைய இளம் தலைமுறையின் காதல், நட்பு என அவர்களது வாழ்வை பிரதிபலிக்கும் படைப்பாக இந்த படத்தை உருவாக்கியுள்ளார்.

சிட்டி லைட் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்துக்கு டி.இமான் இசையமைத்துள்ளார். புதுமுக நாயகன் ஜெகவீர் நாயகனாக நடிக்கும் இந்த படத்தில் மீனாட்சி கோவிந்தராஜன் நாயகியாக நடிக்கிறார். மேலும் பால சரவணன், ஆண்டனி பாக்யராஜ், ஜெயபிரகாஷ், வினோதினி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

இந்த நிலையில், இந்த படத்தின் புதிய அப்டேட் வெளியாகி உள்ளது. அதன்படி, '2கே லவ் ஸ்டோரி' படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் இன்று (ஆகஸ்ட் 2) வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்