< Back
சினிமா செய்திகள்
சுசீந்திரனின்  2கே லவ் ஸ்டோரி பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியீடு
சினிமா செய்திகள்

சுசீந்திரனின் '2கே லவ் ஸ்டோரி' பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியீடு

தினத்தந்தி
|
2 Aug 2024 9:20 PM IST

சுசீந்திரன் இயக்கும் '2கே லவ் ஸ்டோரி' படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது.

சென்னை,

இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் இன்றைய நவ நாகரீக இளைஞர்களின் வாழ்வை சொல்லும் படமாக, ரொமான்ஸ் ஜானரில் உருவாகும் திரைப்படம் '2கே லவ் ஸ்டோரி'. இன்றைய இளம் தலைமுறையின் காதல், நட்பு என அவர்களது வாழ்வை பிரதிபலிக்கும் படைப்பாக இந்த படத்தை உருவாக்கியுள்ளார்.

சிட்டி லைட் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்துக்கு டி.இமான் இசையமைத்துள்ளார். புதுமுக நாயகன் ஜெகவீர் நாயகனாக நடிக்கும் இந்த படத்தில் மீனாட்சி கோவிந்தராஜன் நாயகியாக நடிக்கிறார். மேலும் பால சரவணன், ஆண்டனி பாக்யராஜ், ஜெயபிரகாஷ், வினோதினி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

வெட்டிங் போட்டோகிராபி எடுக்கும் இளைஞர்களின் வாழ்வில் நடக்கும் சம்பவங்களை அடிப்படையாக கொண்டு படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது என படக்குழு தெரிவித்துள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு கோவை மற்றும் சென்னையில் நடைபெற உள்ளது.

'2கே லவ் ஸ்டோரி' படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது.

இயக்குநர் சுசீந்திரன் மற்றும் டி.இமான் இணையும் 10 வது திரைப்படம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்