< Back
சினிமா செய்திகள்
சந்தானம் நடிக்கும் இங்க நான்தான் கிங்கு படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது
சினிமா செய்திகள்

சந்தானம் நடிக்கும் 'இங்க நான்தான் கிங்கு' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது

தினத்தந்தி
|
28 Feb 2024 11:48 AM IST

படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் கமல்ஹாசன் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

சென்னை,

காமெடி நடிகராக அறிமுகம் ஆன நடிகர் சந்தானம் தற்போது ஹீரோவாக மட்டும் நடித்து வருகிறார். இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான வடக்குப்பட்டி ராமசாமி படம் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் இந்த படத்தை அடுத்து நடிகர் சந்தானம் ஆனந்த் நாராயண் இயக்கத்தில் 'இங்க நான்தான் கிங்கு' என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை கோபுரம் பிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் அன்புச் செழியன் மற்றும் சுஷ்மிதா அன்புச் செழியன் ஆகிய இருவரும் இணைந்து தயாரிக்கின்றனர்.

மேலும் இந்த படத்திற்கு டி இமான் இசை அமைக்கிறார். இந்நிலையில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகி உள்ளது. இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் கமல்ஹாசன் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்