< Back
சினிமா செய்திகள்
சினிமா செய்திகள்
சமுத்திரக்கனி நடிக்கும் 'திரு.மாணிக்கம்' படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியானது..!
|20 Sept 2023 10:52 PM IST
சமுத்திரக்கனி நடிக்கும் 'திரு.மாணிக்கம்' திரைப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது.
சென்னை,
இயக்குநர் நந்தா பெரியசாமி இயக்கத்தில், நடிகர் சமுத்திரக்கனி கதையின் நாயகனாக நடிக்கும் புதிய படத்துக்கு 'திரு.மாணிக்கம்' என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தில் அனன்யா, பாரதிராஜா, நாசர், தம்பிராமையா, ஸ்ரீமன், வடிவுக்கரசி, கருணாகரன், இளவரசு உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.
இந்த படத்துக்கு எம்.சுகுமார் ஒளிப்பதிவு செய்கிறார். விஷால் சந்திரசேகர் இசையமைக்கிறார். திரு.மாணிக்கம் திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தற்போது இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது.
இந்த பர்ஸ்ட்லுக் போஸ்டரை இயக்குனர் வெங்கட் பிரபு தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டார். இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.