< Back
சினிமா செய்திகள்
தோனி தயாரிக்கும் எல்.ஜி.எம் படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியானது..!
சினிமா செய்திகள்

தோனி தயாரிக்கும் 'எல்.ஜி.எம்' படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியானது..!

தினத்தந்தி
|
10 April 2023 9:06 PM IST

தோனி தயாரிக்கும் 'எல்.ஜி.எம்' திரைப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது.

சென்னை,

'தோனி எண்டர்டெயின்மெண்ட்' என்ற பெயரில் திரைப்பட தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தோனி தொடங்கியுள்ளார். இந்த நிறுவனம், ஒரு நேரடி தமிழ் படத்தை தயாரிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

'தோனி எண்டர்டெயின்மெண்ட்' தயாரிக்கும் இந்த படத்திற்கு 'எல்.ஜி.எம்' (Lets Get Married) என்று பெயரிடப்பட்டுள்ளது. அறிமுக இயக்குனர் ரமேஷ் தமிழ்மணி இயக்கத்தில் தயாராகும் 'எல்.ஜி.எம்' (Lets Get Married) திரைப்படத்தில் நதியா, ஹரிஷ் கல்யாண், இவானா, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் 'எல்.ஜி.எம்' (Lets Get Married) திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகி உள்ளது. அந்த போஸ்டரில் நடிகர் ஹரிஷ் கல்யாண் கையில் மோதிரத்துடன் நிற்கிறார். அவருக்கு அருகில் நதியாவும் இவானாவும் அவரை முறைத்து கொண்டு நிற்கிறார்கள். இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

மேலும் செய்திகள்