லிஜோமோல் ஜோஸ், லாஸ்லியா நடிக்கும் 'அன்னபூரணி' படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியானது..!
|லிஜோமோல் ஜோஸ், லாஸ்லியா நடிக்கும் 'அன்னபூரணி' திரைப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது.
சென்னை,
அறிமுக இயக்குனர் லயோனல் ஜோஸ்வா இயக்கத்தில் லிஜோமோல் ஜோஸ், லாஸ்லியா முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் திரைப்படம் 'அன்னபூரணி'. மேலும் இந்த படத்தில் மெட்ராஸ் ஹரிகிருஷ்ணன், ராஜீவ் காந்தி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர்.
கோமளா ஹரி பிக்சர்ஸ் மற்றும் ஒன் டிராப் ஓசன் பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்கும் இந்த படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். ஹெக்டர் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஆர். கலைவாணன் படத்தொகுப்பு செய்கிறார்.
திரில்லர் வகையில் பெண்கள் குடும்ப அமைப்பிற்குள் அனுபவிக்கும் சிரமங்களை மையமாகக் கொண்ட கதையாக 'அன்னபூரணி' திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிந்த நிலையில், இறுதி கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டரை இயக்குனர் வெற்றிமாறன் மற்றும் நடிகர் ஜெயம் ரவி தங்கள் சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டனர்.
நடிகர் ஜெயம் ரவி, "எங்கெல்லாம் அன்பினாலும் அதிகாரத்தினாலும் ஒரு பெண் அடக்கப்படுகிறாளோ அங்கெல்லாம் ஓர் அன்னபூரணி தேவைப்படுகிறாள்" என்று குறிப்பிட்டு பர்ஸ்ட்லுக் போஸ்டரை பகிர்ந்துள்ளார். இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.