அஞ்சலி நடிக்கும் 50-வது படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியானது..!
|அஞ்சலி நடிக்கும் 50-வது திரைப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது.
சென்னை,
ராம் இயக்கிய 'கற்றது தமிழ்' படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் அஞ்சலி. அங்காடித்தெரு படம் அஞ்சலிக்கு திருப்புமுனையாக அமைந்தது. தொடர்ந்து அவர் நடித்த எங்கேயும் எப்போதும், கலகலப்பு, மங்காத்தா படங்களிலும் அஞ்சலியின் நடிப்பு பேசப்பட்டது. ரெட்ட சுழி, தூங்காநகரம், அரவான், சேட்டை, சகலகலா வல்லவன், மாப்ள சிங்கம், இறைவி, நாடோடிகள் 2 என்று நிறைய படங்களில் நடித்துள்ளார்.
தெலுங்கு, மலையாள, கன்னட மொழி படங்களிலும் நடித்து இருக்கிறார். சினிமாவில் அறிமுகமாகி இதுவரை 49 படங்களில் நடித்து முடித்துள்ள அஞ்சலி தற்போது 50-வது படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். இந்த நிலையில் இந்த படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட்லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.
இந்த படத்திற்கு 'ஈகை' என்று பெயரிடப்பட்டுள்ளது. கிரீன் அமியூஸ்மெண்ட் மற்றும் டி3 புரடொக்சன்ஸ் இணைந்து தயாரிக்கும் இந்த படத்தை அசோக் வேலாயுதம் இயக்குகிறார். இந்த படத்திற்கு ஸ்ரீதர் ஒளிப்பதிவு செய்கிறார். தரண் குமார் இசையமைக்கிறார். இந்த பர்ஸ்ட்லுக் போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.