< Back
சினிமா செய்திகள்
வேட்டையன் ராஜா கதாபாத்திரத்தின் முதல் தோற்றம் வெளியானது..!

Image Courtesy:Twitter@offl_Lawrence

சினிமா செய்திகள்

'வேட்டையன் ராஜா' கதாபாத்திரத்தின் முதல் தோற்றம் வெளியானது..!

தினத்தந்தி
|
31 July 2023 10:29 AM IST

இன்று காலை 10 மணிக்கு 'வேட்டையன் ராஜா' கதாபாத்திரத்தின் முதல் தோற்றம் வெளியாகியுள்ளது.

சென்னை,

சந்திரமுகி பட முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து 17 வருடங்கள் கழித்து 'சந்திரமுகி 2' திரைப்படம் பிரமாண்டமாக உருவாகி வருகிறது. இப்படத்தை பி. வாசு இயக்க ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடித்து வருகிறார். கங்கனா ரனாவத் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்.

மேலும் வடிவேலு உள்ளிட்ட பல திரைப்பிரபலங்கள் இதில் நடிக்கின்றனர். லைகா நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க, எம்.எம். கீரவாணி இசையமைக்கிறார். இந்நிலையில் 'சந்திரமுகி 2' படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக படக்குழு புகைப்படம் வெளியிட்டு அறிவித்திருந்தது.

இதையடுத்து படத்தின் அடுத்தடுத்த அறிவிப்புகள் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்து கொண்டிருந்தனர். இந்நிலையில் 'சந்திரமுகி 2' படத்தின் முக்கிய கதாபாத்திரமான வேட்டையன் ராஜாவின் முதல் தோற்றம் நாளை காலை 10 மணிக்கு வெளியாகும் என படக்குழு நேற்று அறிவித்திருந்தது.

அதன்படி இன்று காலை 'வேட்டையன் ராஜா' கதாபாத்திரத்தின் முதல் தோற்றம் வெளியாகியுள்ளது.

மேலும் செய்திகள்