< Back
சினிமா செய்திகள்
சினிமா செய்திகள்
'தளபதி 68' படத்தின் பர்ஸ்ட் லுக் இன்று வெளியாகிறது...!
|31 Dec 2023 12:33 PM IST
கல்பாத்தி எஸ் அகோரம் சார்பில் ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.
சென்னை,
இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் விஜய் நடிக்கிறார். 'தளபதி 68' என தற்காலிகமாக பெயர் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தில் பிரசாந்த், மோகன், பிரபுதேவா, ஜெயராம், கணேஷ், யோகிபாபு, அஜ்மல் அமீர், வைபவ், பிரேம் ஜி, அரவிந்த் ஆகாஷ், அஜய் ராஜ், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
கல்பாத்தி எஸ் அகோரம் சார்பில் ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். சித்தார்த்த முனி ஒளிப்பதிவு செய்கிறார்.
இந்த நிலையில் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி இன்று மாலை 6 மணிக்கு பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்படவுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.