படமாகும் வாஜ்பாயின் வாழ்க்கை வரலாறு... ரிலீஸ் தேதி குறித்த தகவல் வெளியானது..!
|முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல் வெளியாகி உள்ளது
சென்னை,
முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக தயாராகி உள்ளது. இதில் வாஜ்பாய் கதாபாத்திரத்தில் பிரபல நடிகரான பங்கஜ் திரிபாதி நடித்துள்ளார். இந்த படத்தினை மூன்று முறை தேசிய விருது வென்ற ரவி ஜாதவ் இயக்கியுள்ளார்.
இந்தப் படத்திற்கு 'மெயின் அடல் ஹூன்' என பெயரிட்டுள்ளனர். வினோத் பானுஷாலி, சந்தீப் சிங், சாம் கான் மற்றும் கமலேஷ் பானுஷாலி ஆகியோர் தயாரிக்கின்றனர்.சமீபத்தில் இந்த படத்தின் முதல் தோற்றம் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை பெற்றது. அந்த போஸ்டரில் நடிகர் பங்கஜ் திரிபாதி பார்ப்பதற்கு அப்படியே வாஜ்பாய்போல இருப்பதாக பலரும் கருத்து தெரிவித்தனர். இந்த படத்தில் வாஜ்பாயின் பிறப்பு முதல் இறப்பு வரை நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன.
இந்நிலையில் இந்த படத்தின் வெளியீட்டு தேதி குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி இந்தப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி 19ம் தேதி திரைக்கு வர உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாகவும் தொழில்நுட்ப வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.