< Back
சினிமா செய்திகள்
நிவின் பாலி  பிறந்த நாளை முன்னிட்டு புதிய போஸ்டர் வெளியிட்டு வாழ்த்து தெரிவித்த  படக்குழு
சினிமா செய்திகள்

நிவின் பாலி பிறந்த நாளை முன்னிட்டு புதிய போஸ்டர் வெளியிட்டு வாழ்த்து தெரிவித்த படக்குழு

தினத்தந்தி
|
11 Oct 2023 10:17 PM IST

'ஏழு கடல் ஏழு மலை' படத்தில் கதாநாயகனாக நடிகர் நிவின் பாலி நடிக்கிறார்.

சென்னை,

இயக்குனர் ராம் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம்'ஏழு கடல் ஏழு மலை' இந்த படத்தில் கதாநாயகனாக மலையாள நடிகர் நிவின் பாலி நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக அஞ்சலி நடித்து வருகிறார். மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் சூரி நடித்துள்ளார். வி ஹவ்ஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.

இப்படத்தின் முதல் தோற்ற போஸ்டர் சமீபத்தில் வெளியானது. இந்நிலையில், இப்படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. அதாவது இன்று இயக்குனர் ராம் மற்றும் நடிகர் நிவின் பாலி பிறந்த நாளை முன்னிட்டு இவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து படக்குழு போஸ்டரை ஒன்றை வெளியிட்டுள்ளது.

மேலும் செய்திகள்