< Back
சினிமா செய்திகள்
ரத்னம் திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு
சினிமா செய்திகள்

'ரத்னம்' திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு

தினத்தந்தி
|
25 Jan 2024 5:15 PM IST

தாமிரபரணி, பூஜை படங்களுக்கு பிறகு இயக்குனர் ஹரி மற்றும் நடிகர் விஷால் இணையும் மூன்றாவது படம் ரத்னம் என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னை,

இயக்குனர் ஹரி இயக்கத்தில் நடிகர் விஷால் கதாநாயகனாக நடித்து வரும் திரைப்படம் 'ரத்னம்'. தாமிரபரணி, பூஜை படங்களுக்கு பிறகு இருவரும் இணையும் மூன்றாவது படம் ரத்னம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் விஷாலுக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்கிறார். மேலும் கவுதம் மேனன், சமுத்திரக்கனி, யோகிபாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

ஜீ ஸ்டுடியோஸ் சவுத் மற்றும் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பெஞ்ச் பிலிம்ஸ் இணைந்து தயாரிக்கும் இந்த படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். இந்த படத்தை இந்த ஆண்டு கோடை விடுமுறையை முன்னிட்டு வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. சமீபத்தில் இந்த படத்தின் முதல் பாடல் வெளியாகி கவனம் பெற்றது.

இந்நிலையில், 'ரத்னம்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் வருகிற ஏப்ரல் 26-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது.

மேலும் செய்திகள்