< Back
சினிமா செய்திகள்
கைப்பந்து விளையாட்டை மையமாக வைத்து படம்
சினிமா செய்திகள்

கைப்பந்து விளையாட்டை மையமாக வைத்து படம்

தினத்தந்தி
|
31 March 2023 4:35 AM GMT

கைப்பந்து விளையாட்டை மையமாக வைத்து `எப்போதும் ராஜா' படம் தயாராகி உள்ளது. இதில் விண் விஜய் கைப்பந்து சாம்பியனாகவும், போலீஸ் இன்ஸ்பெக்டராகவும் இரு வேடங்களில் நடிக்கிறார். நாயகிகளாக டெப்லினா, பிரியா பிந்து ஆகியோர் நடிக்கிறார்கள். கும்தாஜ், ஜோமல்லுரி, லயன் குமார், நமசிவாயம், கூல் சுரேஷ் மற்றும் பலர் நடித்துள்ளனர். எச்.முருகன் தயாரித்து டைரக்டு செய்கிறார்.

படம் பற்றி அவர் கூறும்போது, ``கைப்பந்தை மையமாக வைத்து முதல் தடவையாக இந்தப் படம் தயாராகிறது. கைப்பந்து விளையாட்டில் இந்திய சாம்பியன் ஆக வேண்டும் என்று போராடும் இளைஞனுக்கும், நேர்மையான போலீஸ் அதிகாரிக்கும் என்னென்ன பிரச்சினைகள் வருகின்றன என்பது கதை. ஆறு பாடல்கள், ஆறு சண்டைகள் உள்ளன. முழு கமர்ஷியல் படமாக தயாராகிறது'' என்றார். இசை: கபிலேஷ்வர், ராம்ஜி, ஒளிப்பதிவு: பகவதி பாலா.

மேலும் செய்திகள்