படமாகும் ராமாயணம்; ராவணனாக நடிக்கும் யாஷ் சம்பளம் ரூ.150 கோடி
|ராமாயணம் படத்தில் ராவணனாக நடிக்க 'கே.ஜி.எப்.' படத்தின் மூலம் உலக அளவில் கவனம் ஈர்த்த நடிகர் யாஷ் ஒப்பந்தமாகி இருக்கிறார். இதற்காக அவருக்கு ரூ.150 கோடி சம்பளம் நிர்ணயித்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
ராமாயணம் கதையை மையமாக வைத்து ஏற்கனவே 'ஸ்ரீ ராமராஜ்ஜியம்', 'ஆதிபுருஷ்' உள்ளிட்ட பல படங்கள் வந்துள்ளன.
அடுத்து தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் 3டி தொழில்நுட்பத்தில் ராமாயணத்தை 3 பாகங்களாக எடுக்கப் போவதாகவும், ராமராக ரன்பீர் கபூரும், சீதையாக சாய் பல்லவியும் நடிக்கிறார்கள் என்றும் டைரக்டர் நித்திஷ் திவாரி அறிவித்து உள்ளார்.
இந்த படத்தில் ராவணனாக நடிக்க 'கே.ஜி.எப்.' படத்தின் மூலம் உலக அளவில் கவனம் ஈர்த்த நடிகர் யாஷ் ஒப்பந்தமாகி இருக்கிறார். இதற்காக அவருக்கு ரூ.150 கோடி சம்பளம் நிர்ணயித்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
'கே.ஜி.எப்.-2' படத்துக்கு பிறகு புதிய படங்கள் நடிப்பது குறித்த அறிவிப்பை யாஷ் வெளியிடவில்லை. 'கே.ஜி.எப்.' படத்தின் மூலம் கிடைத்த வரவேற்பை சரியாக பயன்படுத்தி பாலிவுட் சினிமாவில் நுழைய யாஷ் திட்டமிட்டிருந்தார்.
அந்தவகையில்தான் நித்திஷ் திவாரியின் 'ராமாயணம்' படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார். ராவணன் வேடத்தில் யாஷ் நடிக்க இருப்பது அவரது ரசிகர்களை பரபரப்பு கொள்ள செய்துள்ளது.
யாஷின் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்புக்கிடையே 'கே.ஜி.எப்.-3' படம் 2025-ம் ஆண்டு வெளியாக இருக்கிறது.