< Back
சினிமா செய்திகள்
கிராண்ட் பிரிக்ஸ் விருது வென்ற கொட்டுக்காளி திரைப்படம்
சினிமா செய்திகள்

'கிராண்ட் பிரிக்ஸ்' விருது வென்ற 'கொட்டுக்காளி' திரைப்படம்

தினத்தந்தி
|
23 Sept 2024 1:23 PM IST

பி.எஸ்.வினோத் இயக்கத்தில் சூரி நடித்த 'கொட்டுக்காளி' திரைப்படம் 'கிராண்ட் பிரிக்ஸ்' விருது வென்றுள்ளது.

சென்னை,

`கூழாங்கல்' இயக்குனர் பி.எஸ்.வினோத் இயக்கத்தில் சூரி நடித்த திரைப்படம் 'கொட்டுக்காளி'. சிவகார்த்திகேயன் தயாரித்த இத்திரைப்படத்தில் நடிகை அன்னா பென் கதாநாயகியாக நடித்திருந்தார். இவர் தமிழில் நடித்த முதல் திரைப்படம் இதுவாகும். இப்படத்திற்கு இசையமைப்பாளர் இல்லாதது படத்தின் எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்தது.

இந்த எதிர்பார்ப்பை தொடர்ந்து, கடந்த மாதம் 23-ம் தேதி இப்படம் வெளியானது. சினிமா நட்சத்திரங்கள் உள்பட பலர் இப்படத்திற்கு பாராட்டு தெரிவித்தனர். இந்த படமானது ரிலீஸுக்கு முன்பே பல சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு பார்வையாளர்களிடம் பாராட்டுகளை பெற்றது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில், ரஷ்யாவில் நடைபெற்ற 22-வது அமுர் இலையுதிர்கால சர்வதேச திரைப்பட விழாவில் கொட்டுக்காளி' திரைப்படத்திற்கு 'கிராண்ட் பிரிக்ஸ்' விருது வழங்கப்பட்டுள்ளது. இந்த விருதை இயக்குனர் பி.எஸ்.வினோத் பெற்றுள்ளார். இது குறித்த பதிவை நடிகர் சிவகார்த்திகேயன் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில் ' சர்வதேச மேடையில் இந்த அற்புதமான மரியாதைக்காக நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்' என்று பதிவிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்