< Back
சினிமா செய்திகள்
படமாகும் ஆந்திர முதல்-மந்திரி வாழ்க்கை ஜெகன் மோகன் ரெட்டி வேடத்தில் நடிக்கும் ஜீவா?
சினிமா செய்திகள்

படமாகும் ஆந்திர முதல்-மந்திரி வாழ்க்கை ஜெகன் மோகன் ரெட்டி வேடத்தில் நடிக்கும் ஜீவா?

தினத்தந்தி
|
4 May 2023 8:53 AM IST

மறைந்த ஆந்திர முதல்-மந்திரி ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி வாழ்க்கை ராகவா இயக்கத்தில் 2019-ல் 'யாத்ரா' என்ற பெயரில் திரைப்படமாக வெளிவந்தது. இதில் ராஜசேகர ரெட்டி கதாபாத்திரத்தில் மம்முட்டி நடித்து இருந்தார். இதன் தொடர்ச்சியாக யாத்ரா 2-ம் பாகம் தயாராகும் என்று டைரக்டர் மஹி அறிவித்தார்.

'யாத்ரா-2' படத்தில் ராஜசேகர ரெட்டியின் மகன் ஜெகன் மோகன் ரெட்டியின் இளம் வயது அரசியல் வாழ்க்கையில் இருந்து தற்போது ஆந்திர முதல்-மந்திரியாகி இருப்பதுவரை நடந்த சம்பவங்கள் இடம்பெற்று இருக்கும் என்று கூறப்படுகிறது. ஆந்திராவில் தேர்தலுக்கு இன்னும் ஒரு வருடம் இருக்கும் நிலையில் பட வேலைகளை தற்போது தொடங்கி உள்ளனர்.

இந்த படத்தில் ஜெகன்மோகன் ரெட்டி கதாபாத்திரத்தில் நடிக்க நடிகர் ஜீவாவிடம் படக்குழுவினர் பேசி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே ஜெகன்மோகன் ரெட்டியாக நடிக்க சூர்யா பெயர் அடிப்பட்டது. ஆனால் அவர் தன்னை யாரும் அணுக வில்லை என்று தெரிவித்து விட்டார். தற்போது ஜீவாவை தேர்வு செய்துள்ளனர். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக இருக்கிறது. திரைக்கதை தயாராகி விட்டதாகவும், படப்பிடிப்பை விரைவில் தொடங்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

மேலும் செய்திகள்