தேசிய விருதை குறிவைக்கும் படம்
|ஞான ஆரோக்கிய ராஜா, கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி, தயாரித்து, இயக்கியுள்ள படம் `உதிர்'.`இது கதையல்ல நிஜம்' படத்தில் நடித்த சந்தோஷ் சரவணன் மற்றும் விதுஷ் கதாநாயகர்களாக நடிக்கிறார்கள். சரத்குமாரின் `கம்பீரம்' படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த மனிஷா கதாநாயகியாக நடித்துள்ளார். மனோபாலா, சிங்கம்புலி, தேவதர்ஷினி, முத்துக்காளை, மணி, சிசர் மனோகர், போண்டா மணி ஆகியோரும் உள்ளனர்.
படம் பற்றி இயக்குனர் ஞான ஆரோக்கியராஜா கூறும்போது, ``படிக்கும் போது வரும் காதல் சரியா, தவறா என்பதை மையமாகக் கொண்டு, இந்தப் படம் உருவாகி உள்ளது. படத்தில் நான்கு பாடல்கள் உள்ளன. `நமச்சிவாயா... நமச்சிவாயா... ஓம் நமச்சிவாய!' பாடல் புகழ் அரவிந்த் ஸ்ரீராம் பாடல் களுக்கு இசை அமைத்துள்ளார். மதுரை ஈஸ்வர் பின்னணி இசையமைத்துள்ளனர்.
ஒளிப்பதிவு: ஜோ. தணிக்கை குழு, இந்தப் படத்திற்கு யூ சான்றிதழ் வழங்கியுள்ளது. திரைப்பட விமர்சகர்கள் இந்தப் படம் கண்டிப்பாக தேசிய விருதுக்கு பரிந்துரைக்கப்படும் என்று தெரிவித்ததாக படக்குழுவினர் தெரிவித்து உள்ளனர்.