சென்னை
படமாகும் உண்மைச் சம்பவம்
|கொடைக்கானலில் நடந்த உண்மைச் சம்பவத்தை மையமாக வைத்து கதாநாயகி இல்லாமல் கதையை நாயகனாக கொண்ட உயிரோட்ட சம்பவங்களின் தொகுப்பாக ‘உயிர்த்துளி' தயாராவதாக நாஞ்சில் பி.சி. அன்பழகன் தெரிவித்து உள்ளார்.
'காமராசு', 'அய்யா வழி', 'நதிகள் நனைவதில்லை' படங்களுக்குப் பிறகு, நாஞ்சில் பி.சி.அன்பழகன் தயாரித்து கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கும் படம், 'உயிர்த் துளி'. இதில் நடிகர் சிங்கமுத்துவின் மகன் கார்த்திக், எஸ்.ஏ.சந்திரசேகர், வாகை சந்திரசேகர், சரவணன், கஸ்தூரி, கோமல் ஷர்மா, சீதா, ரோஷன், காவியா, நித்யமது, கலை, கவிதா ஶ்ரீ, பிரியதர்ஷினி, எலிசபெத், சிங்கமுத்து, மதன்பாப், ரவிமரியா, ரோபோ சங்கர், மதுரை முத்து, பவர் ஸ்டார், அருள்மணி, போண்டாமணி, ரெங்கநாதன், வையாபுரி, ஜெயமணி, தாம்ஸன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். கொடைக்கானலில் நடந்த உண்மைச் சம்பவத்தை மையமாக வைத்து கதாநாயகி இல்லாமல் கதையை நாயகனாக கொண்ட உயிரோட்ட சம்பவங்களின் தொகுப்பாக 'உயிர்த்துளி' தயாராவதாக நாஞ்சில் பி.சி. அன்பழகன் தெரிவித்து உள்ளார். ஒளிப் பதிவு: கார்த்திக் ராஜா, எடிட்டிங்: லெனின், ஸ்டண்ட்: கனல் கண்ணன்.