படமாகும் உண்மை சம்பவம்
|கர்நாடகாவில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை மையமாக வைத்து ‘விஜயானந்த்’ என்ற பெயரில் படம் தயாராகி உள்ளது.
கர்நாடகாவில் ஒரு கிராமத்தில் சிறிய டிரக்கை வைத்துக்கொண்டு தொழில் ஆரம்பித்து நான்காயிரத்து முன்னூறு வாகனங்களுக்கு சொந்தக்காரராக மாறிய பெரிய தொழில் அதிபரின் வாழ்க்கை உண்மை சம்பவங்களை வைத்து 'விஜயானந்த்' என்ற பெயரில் படம் தயாராகி உள்ளது. தொழில் அதிபர் விஜய் சங்கேஸ்வரின் வாழ்க்கை வரலாற்றை தழுவி இந்த படம் எடுக்கப்படுகிறது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய 5 மொழிகளில் தயாராகிறது. இந்த படத்தில் கதையின் நாயகனாக நிஹால் நடித்துள்ளார். இவருடன் ஆனந்த் நாக், ரவிச்சந் திரன், பாரத் பொப்பண்ணா, பிரகாஷ் பெலவாடி, ஸ்ரீ பிரகலாத், வினயா பிரசாத், அர்ச்சனா, அனிஷ் குருவில்லா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கீர்த்தன் பூஜாரி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு கோபி சுந்தர் இசையமைத்திருக்கிறார். சுய சரிதையை தழுவி தயாராகும் இந்த படத்தை வி.ஆர்.எல். பிலிம்ஸ் நிறுவனம், அதிக பொருட்செலவில் தயாரித்துள்ளது.