< Back
சினிமா செய்திகள்

சினிமா செய்திகள்
'வணங்கான்' படத்தின் டீசரை வெளியிட்ட படக்குழு

19 Feb 2024 5:41 PM IST
வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் மற்றும் பி ஸ்டுடியோஸ் தயாரிக்கும் இந்த படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.
சென்னை,
சேது, நந்தா, பிதாமகன், நான் கடவுள், அவன் இவன் உள்ளிட்ட பல படங்களை இயக்கிய பாலா, தற்போது 'வணங்கான்' என்ற படத்தை இயக்கி வருகிறார். அருண் விஜய் கதாநாயகனாக நடிக்கும் இந்த படத்தில், ரோஷினி பிரகாஷ் கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் சமுத்திரக்கனி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் மற்றும் பி ஸ்டுடியோஸ் தயாரிக்கும் இந்த படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். ஆர்.பி.குருதேவ் ஒளிப்பதிவு செய்கிறார். சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது. 'வணங்கான்' திரைப்படத்தின் டீசர் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என்று படக்குழு அறிவித்திருந்தது. அதன்படி இப்படத்தின் டீசர் தற்போது வெளியாகி உள்ளது. இந்த டீசர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.