< Back
சினிமா செய்திகள்
ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் மேக்கிங் வீடியோவை வெளியிட்ட படக்குழு..!
சினிமா செய்திகள்

'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்' படத்தின் மேக்கிங் வீடியோவை வெளியிட்ட படக்குழு..!

தினத்தந்தி
|
8 Nov 2023 3:55 PM IST

'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்' திரைப்படம் நாளை மறுநாள் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

சென்னை,

'ஜிகர்தண்டா' திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து 8 வருடங்களுக்கு பிறகு இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது. இந்த படத்திற்கு 'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்' என பெயரிடப்பட்டுள்ளது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா மற்றும் ராகவா லாரன்ஸ் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இந்த படத்துக்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். திருநாவுக்கரசு ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த திரைப்படம் நாளை மறுநாள் (10-ந்தேதி) திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. சமீபத்தில் இந்த படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் வெளியாகி கவனம் பெற்றன.

இந்த நிலையில் 'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்' திரைப்படத்தின் மேக்கிங் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.


மேலும் செய்திகள்