'கல்கி 2898 ஏ.டி' படத்தில் நடிகர் பிரபாசின் கதாபாத்திரத்தை அறிமுகப்படுத்திய படக்குழு
|நாக் அஸ்வின் இயக்கத்தில் 'கல்கி 2898 ஏ.டி' படத்தில் பிரபாஸ் நடித்து வருகிறார்.
சென்னை,
தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக திகழ்பவர் நடிகர் பிரபாஸ். பாகுபலி மற்றும் பாகுபலி 2 படங்களின் வெற்றியை தொடர்ந்து பான் இந்தியா அளவில் பெரிய நடிகராக உயர்ந்தார். அதனை தொடர்ந்து இவரது நடிப்பில் வெளியான சாஹோ, ராதே ஷியாம். ஆதிபுருஷ் போன்ற படங்கள் பெரிய தோல்வியை சந்தித்தன.
சமீபத்தில் கே.ஜி.எப் பட இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் வெளியான 'சலார்' திரைப்படத்தில் பிரபாஸ் நடித்திருந்தார். இந்த படம் உலகளவில் ரூ.500 கோடி வசூலை கடந்து மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்துள்ளது.
இந்த படத்தை தொடர்ந்து நாக் அஸ்வின் இயக்கத்தில் 'கல்கி 2898 ஏ.டி' படத்தில் பிரபாஸ் நடித்து வருகிறார். அறிவியல் சார்ந்த கதைக்களத்தில் தயாராகும் இந்த படத்தில் நடிகர் கமல்ஹாசன் வில்லனாக நடிக்கிறார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். அமிதாப்பச்சன், தீபிகா படுகோனே உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ள இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் தயாராகி வருகிறது.
சமீபத்தில் படத்தின் முதல் டீசரை படக்குழு வெளியிட்டது. இந்த டீசர் சமூக வலைதளங்களில் வைரலானது. இதைதொடர்ந்து, பிரமாண்டமாக தயாராகும் இந்த படத்திற்காக புதிய வகை துப்பாக்கியின் புகைப்படத்தை படக்குழு சமூக வலைதளத்தில் வெளியிட்டது. இந்த புகைப்படம் ரசிகர்களிடம் பெறும் வரவேற்பை பெற்றது.
இந்நிலையில், இப்படத்தில் புதிய அப்டேட் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. அதன்படி நடிகர் பிரபாசின் "பைரவா" கதாபாத்திரத்தை படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. இந்த திரைப்படம் மே 9ம் தேதி வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.